உலக வெப்பமயமாதலுக்கு அமெரிக்காவும் இந்தியாவுமே பிரதான பங்காளிகள்

அமெரிக்காவும் இந்தியாவுமே அதிகளவில் காபனை வெளியிடுவதாக ஆய்வு மற்றும் அணுசக்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எதுல் கோட்டே பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  உலகம் பாரியளவு சுற்றாடல் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். உலகம் வெப்பமாவதற்கு பிரதானமாக பங்களிப்பு செய்யும் நாடுகளாக அமெரிக்காவும், இந்தியாவையும் குறிப்பிட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகம் வெப்பமயமாதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் வெள்ளம், வரடச்சி மற்றும் பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதனை தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply