ஏமனில் அரசு – அல்கொய்தா தீவிரவாதிகள் மோதலில் 9 பேர் பலி
ஏமன் நாட்டின் தெற்குபகுதியில் அல்கொய்தா தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு திடீர் தாக்குதல் நடத்தி ஏமனின் பெரும்பாலான பகுதிகளை பிடித்தனர். பின்னர் அமெரிக்கா ஏமனுக்கு ஆதரவாக அந்த தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியது. அதிலிருந்து அமெரிக்க ஏமனுக்கு உதவி வருகிறது.
இந்நிலையில் நாட்டின் தெற்குப்பகுதியில் உள்ள அபயான் மாகாணத்தில் உள்ள பாடிஸ் நகரை அல்கொய்தா தீவிரவாதிகள் பிடித்துக்கொண்டனர். கடந்த மூன்று நாட்களாக அரசுக்கு ஆதரவாக செயல்படும் போராளிகளுக்கும், அல்கொய்தா தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த கடும் சண்டைக்கு பிறகு அந்த நகரை மீட்டனர்.
இதில் 6 அல்கொய்தா தீவிரவாதிகளும், 3 அரசுக்கு ஆதரவு போராளிகளும் கொல்லப்பட்டனர். 7 பேர் படுகாயமடைந்தனர். 11 அல்கொய்தா தீவிரவாதிகள் பிடிபட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply