சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாட எதிர்ப்பு

இலங்கை வீரர்கள் பங்கேற்பார்களாயின் ஐபில் போட்டிகளை சென்னையில் நடாத்த அனுமதி அளிக்கக் கூடாதென சுதந்திர ஈழத்திற்கான மாணவர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.  இது குறித்து தமிழக பொலிஸ் ஆணையாளருக்கு மனு ஒன்றை அளிக்கவும் மாணவர் அமைப்பு திட்டமிட்டுள்ளது.   ஐபில் 6வது சீசன் முதல் போட்டி சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையில் ஏப்ரல் 6ம் திகதி சென்னை சிதம்பரம் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிக்க கூடாது எனவும் அவ்வாறு விளையாடினால் அது தமிழர்களின் உணர்வுகளை பாதிக்கும் எனவும் சுதந்திர ஈழத்திற்கான மாணவர் அமைப்பின் மாநில அமைப்பாளர் வி.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயத்தை வலியுறுத்தி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கும் ஐபில் கிரிக்கெட் ஏற்பாட்டு குழுவிற்கும் கடிதம் அனுப்பி வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஐபில் போட்டிகள் சென்னையில் இடம்பெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உறுதி செய்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply