இலங்கையை பிளவுப்படுத்துவதற்கு சூழ்ச்சி
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கையை பிளவுப்படுத்தும் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் போர் படை தோற்கடிக்கப்பட்டாலும் சர்வதேச ரீதியில் அந்த அமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது. ஜெனிவாவில் நவநீதம்பிள்ளையின் ஊடாக அதன் செயற்பாடுகளை முன்னெடுக்கப்பட்டன.
இலங்கையில் தனி நாடு ஒன்றை உருவாக்கும் தேவை எந்த தரப்புக்கு இருந்தாலும் ஒரு தோட்டாவை செலவிடாமல், ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக அதனை பெற்றுக்கொள்ள முடியும். அதுவே தற்போது நடைபெற்று வருகிறது.
சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் சவால்களை புத்திசாலித்தனமாக எதிர்நோக்க வேண்டிய காலம் எழுந்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் பணிகள் முடிந்துள்ள போதிலும் வெளிவிவகார அமைச்சின் பணிகள் முடிவடையவில்லை எனவும் லால்காந்த கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply