திமுக, தமிழக அரசு இலங்கை தமிழர்களுக்காக என்ன செய்தது ?
திராவிட முன்னேற்றக் கழகமோ தமிழக அரசோ இலங்கை தமிழர்களின் நன்மைக்காக எதனையும் செய்யவில்லை என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசியல்வாதிகள் இலங்கை தமிழர்கள் குறித்து சிந்திப்பவர்கள் என்றால் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை தடுத்த நிறுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறும் ஆயிரக்கணக்கான மீன்பிடி படகுகள் தமிழக அரசியல்வாதிகளுக்கு ஆதரவு வழங்கும் வர்த்தகர்களுடையது என கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
காலியில் (25) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகள், அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச ஊடக நிறுவனங்கள் இன்னும் புலிகள் இயக்கத்திற்காக செயற்பட்டு வருவதாக கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சுமத்தினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply