இலங்கை வீரர்கள் தமிழகத்தில் விளையாட அனுமதிக்கக் கூடாது!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் தமிழகத்தில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ள்ளார். இதேபோல் இலங்கையின் நடுவர்களையும் அனுமதிக்கவும் முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 3-ந் திகதி தொடங்கி 45 நாட்கள் நடைபெறுகிறது. இதில் சென்னையில் 10 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இலங்கையைச் சேர்ந்த 8 வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

தற்போது தமிழகத்தில் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிராகவும் தமிழீழத் தனியரசு அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரியும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. இப்போராட்டங்களின் போது இலங்கையைச் சேர்ந்த எந்த விளையாட்டு வீரர்களையும் தமிழகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற குரலும் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், ஐபிஎல் போட்டிகளில் தமிழகத்தில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை வலியுறுத்த வேண்டும். இலங்கை அரசுக்கு எதிரான தமிழர்களின் உனர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இதனால் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்களை சேர்க்கமாட்டோம் என்று உறுதி அளிக்க வேண்டும்,

இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களை மட்டுமின்றி அந்நாட்டின் நடுவர்களையும் தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply