இலங்கையர்கள் தமிழ்நாடு வருவதனை ஒத்திவைக்குமாறு கோரிக்கை

இந்தியாவின் தமிழ்நாட்டில் தொடர்ந்தும் பதற்றநிலையே காணப்படுவதனால் இலங்கையர்கள் தமிழ்நாடு வருவதனை சிறிது காலம் ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொள்வதாக இந்தியாவுக்கான இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் அமீர் அஜ்வாட் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கையர்கள் தொடர்பிலான தற்போ தைய நிலை குறித்து சென்னையிலுள்ள பிரதி உயர்ஸ்தானிகரிடம் தினகரன் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சென்னையில் இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னால் இந்தியர்கள் கடந்த வாரங்களில் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் பதற்ற நிலை காணப்பட்டது. தொடர்ந்தும் நாம் தமிழ்நாட்டின் நிலவரம் குறித்து கண்காணித்து வருகின்றோம். முன்னேற்றம் தெரியும் வரை இலங்கையர்கள் தமிழ்நாட்டிற்கான தமது விஜயத்தை ஒத்திவைப்பதே சிறந்தது எனவும், அவர் தமிழ்நாடு செல்லவுள்ள உல்லாசப் பயணிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் உல்லாச பயணிகள் தமிழ் நாட்டை விடுத்து வேறு மாநிலங்களுக்கூடாக பயணம் செய்யலாமெனவும் அவர் ஆலோசனைத் தெரிவித்தார்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது தமிழ்நாட்டின் பாதுகாப்பு நிலைமை ஓரளவு சீரடைந்துள்ளதென சுட்டிக்காட்டிய பிரதி உயர்ஸ்தானிகர் அமீர் அஜ்வாட் தமிழ்நாட்டிலுள்ள இலங்கை நிறுவனங்களுக்கும் முக்கிய பதவி வகிக்கும் உயரதிகாரிகளுக்கும் பூரண பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டி ருப்பதாகவும் குறிப்பிட் டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply