தெற்காசியாவிலேயே மிகப்பெரிய புத்த பெருமானின் மெழுகுச் சிலை இலங்கையில்
தெற்காசியாவிலே மிகப்பெரிய புத்த பெருமானின் மெழுகுச் சிலையொன்றை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் வெசாக் போயா தினத்தில் ஆரம்பிக்கப் படவுள்ளது. கொட்டாவ மாகும்புர புரான விகாரைக்கு அருகிலுள்ள எழில்மிகு வயல்வெளிக்கு மத்தியில் 180 அடி உயரத்தில் இந்த மெழுகுச்சிலை அமைக்கப்படவுள்ளது.
தென் மாகாண அதிவேக நெடுஞ்சாலை ஆரம்பமாகும் இடத்துக்கு முன்பாக மாகும்புர நுழைவாயிலில் இந்த மெழுகுச் சிலையை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றது. 2600வது சம்புத் தத்துவ ஜயந்தியையொட்டி நிர்மாணிக்கப்படவிருக்கும் இந்த அழகான மெழுகுசிலை சிங்கள கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் அமைக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இந்த புத்த பெருமானின் மெழுகுச்சிலை அமைக்கப்படுவதால் நாட்டுக்கும், இலங்கையிலுள்ள பெளத்த பீடங்களுக்கும் பெரும் புண்ணியமாகும் என்பதால், ஜனாதிபதியினால் 10 இலட்சம் ரூபா இதன் நிர்மாணப் பணிக்காக அர்ப்பணிப்பு செய்யப்பட்டு ள்ளது.
இந்த மெழுகுச்சிலை அமைக்கப்படுவ தற்கு ஏதுவாக இந்த குறிப்பிட்ட இடத்திலே 2600 புத்த பகவானின் சின்னஞ்சிறிய சிலைகளும் அமைக்கப்படவுள்ளன. இந்தக் கலந்துரையாடலில் கோட்டே கல்யாணி சாமசிறி தர்ம மகாசங்க சபையின் பிரதம குரு இத்தாபொத தம்மாலங்கார தேரர், எல்லாவல மேதானந்த தேரர், கலாநிதி பெல்லங்வில விமலரத்ன தேரர், கல்வியமைச்சர் பந்துல குணவர்தன, பெளத்த சாசன மற்றும் மதவிவகாரப் பிரதியமைச்சர் எம். கே. ஏ. டி. எஸ். குணவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply