ஐபிஎல் போட்டிகளை இலங்கை வீரர்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும் – அர்ஜுன

இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால், சென்னையில் நடக்கும் போட்டிகளில் மட்டும் இலங்கை வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என்று ஐ.பி.எல். ஆட்சி மன்றக் குழு அறிவித்து விட்டது.  இதுகுறித்து இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க அளித்த பேட்டியில், 

சென்னையில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க கூடாது என இலங்கை வீரர்களுக்கு ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்தது ஏமாற்றம் அளிக்கிறது.

இந்தியாவின் ஒரு பகுதியில் விளையாட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இலங்கை வீரர்கள் ஒட்டு மொத்தமாக ஐபிஎல் தொடரை புறக்கணிக்க வேண்டும்.

சென்னையில் நடக்கும் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முன்வர வேண்டும். இந்த விஷயத்தில் அரசியல் சூழ்ச்சி நடந்துள்ளது.

கிரிக்கெட் என்பது ஒரு பொது விளையாட்டு, இதனை தென்னிந்திய அரசியல்வாதிகள் சிலர் ஓட்டு வாங்கும் நோக்கத்தில் விளையாட்டை அரசியல் ஆக்குகிறார்கள் என்று கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply