ஆபிரிக்க நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள இலங்கை முயற்சி
தென் மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளுடன் கூடுதல் உறவுகளைப் பேணுவதற்கு இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க நாடுகளுடன் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், சீஷெல்ஸ் ஜனாதிபதி ஜேம்ஸ் அலிக்ஸ் மிச்சலிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்து சமுத்திர பிராந்திய வலயத்தில் இலங்கை ஆற்றி வரும் பணிகள் பாராட்டுக்குரியது என ஜனாதிபதி ஜேம்ஸ் அலிக்ஸ் தெரிவித்துள்ளார்.இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தகம்இ சுற்றலாத்துறை மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply