தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் முன்னாள் போராளிகள்
அம்பாறையில் நடைபெறும் தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியை பார்வையிட புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் புலி உறுப்பினர்கள் அழைத்து வரப்பட் டிருந்தனர். கண்காட்சியை முன்னிட்டு இடம் பெற்று வரும் பல்வேறு கலை கலாசார நடன நிகழ்வுகளில் பங்கு கொண்டு தமது திறமைகளை வெளிக் காண்பித்த அவர்கள் காட்சி கூடங்களையும் பார்வையிட்டனர்.
கண்காட்சியின் ஆறாவது நாளான நேற்று ஊடக தினம் என்பதால் முதலாவதாக ஊடக வலயத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
வவுனியா, மருதமடு, பூந்தோட்டம், பொலன்னறுவை மற்றும் வெலிகந்தை புனர்வாழ்வு நிலையங்களி லிருந்து அழைத்து வரப்பட்ட அவர்களை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வரவேற்றதுடன் அமைச்சரும், அம்பாறை மாவட்ட செயலாளர் நீல் த அல்விஸ் ஆகியோரும் ஊடக நிறுவனங்களின் காட்சி கூடங்களுக்கு அழைத்துச் சென்று விளக்கமளித்தனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களான இவர்கள் எமது இன்றைய விசேட விருந்தினர்கள் என்று அமைச்சர் சகலருக்கும் அறிமுகப்படுத்தினார்.
லேக்ஹவுஸ் உட்பட வானொலி, தொலைக்காட்சி காட்சி நிறுவனங்களின் காட்சி கூடங்களுக்கும், ஏனைய காட்சி கூடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட இவர்களது பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டமை விசேட அம்சமாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply