நெல்சன் மண்டேலா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா மீண்டும் ஏற்பட்டுள்ள நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவசரமாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டிய தேவையில் நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை இருப்பதாக அவரை பராமரித்துவரும் மருத்துவர்கள் கருதியதாக தென்னாபிரிக்க ஜனாதிபதி அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதனையடுத்து நேற்று நள்ளிரவுக்கு முன்னதாகவே அவரை அவசரமாக மருத்துவமனையில் அனுமதித்ததாக ஜனாதிபதி அலுவலக பேச்சாளர் மக் மஹராஜ் தெரிவித்தார்.

94 வயதான நெல்சன் மண்டேலா குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்குமாறு தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜேக்கப் சூமா தனது நாட்டு மக்களையும் உலக மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நுரையீரல் தொற்றுக் காரணமாகவும் பித்தக்கற்கள் காரணமாகவும் கடந்த டிசம்பரிலும் மண்டேலா 18 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

1980களில் ரோபென் தீவுகளில் சிறைவைக்கப்பட்டிருந்தபோது நெல்சன் மண்டேலா காசநோய் தொற்றுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply