ஜனாதிபதியின் தகவல்,தொழில்நுட்ப ஆலோசகர் நாராயணன் ராஜினாமா

இலங்கை அரசாங்கத்தின் தொழில்நுட்ப ஆலோசகராகுமாறு விடுத்த வேண்டுகோளை இந்தியாவின் இன்போஃசிஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவரும், ஆலோசகருமான என்.ஆர்.நாராயணமூர்த்தி நிராகரித்துள்ளார்.
 
இலங்கை அரசாங்கத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக நாராயணமூர்த்தியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார். எனினும் தனிப்பட்ட காரணங்களுக்காக இதிலிருந்து தான் விலகிக்கொள்வதாக நாராணயமூர்த்தி ஜனாதிபதிக்கு கடிதம்மூலம் அறிவித்துள்ளார்.

“எனது அண்மைய இலங்கை விஜயத்தின் போது சிறப்பான முறையில் உபசரித்தமைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தனிப்பட்ட காரணங்களுக்காக உங்கள் அரசாங்கத்தின் தொழில்நுட்ப ஆலோசகராகக் கடமையாற்றுவதிலிருந்து விலகிக் கொள்கிறேன்” என நாராணயமூர்த்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டை ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப ஆண்டாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரகடனப்படுத்தியதுடன், அவற்றுக்காக பல்வேறு செயற்திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாகவே இலங்கை அரசாங்கத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக நாராணயமூர்த்தியை இலங்கை அரசாங்கம் நியமித்தது.

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களைப் படுகொலை செய்துவதும் நிலையில் இன்போஃசிஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் நாராயணமூர்த்தி, மஹிந்த ராஜபக்ஷவின் தொழில்நுட்ப ஆலோசகராகச் செல்லக்கூடாதெனத் தமிழகத்தில் எதிர்ப்புக் குரல்கள் எழுப்பப்பட்டிருந்தன. அவ்வாறு எதிர்ப்புக் குரல்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையிலேயே இலங்கை ஜனாதிபதியின் நியமனத்தை நாராயணமூர்த்தி நிராகரித்துள்ளார்.

நாராயணமூர்த்தி ஏற்கனவே தென்கொரிய ஜனாதிபதி மற்றும் மலேசியப் பிரதமர் ஆகியோருக்கு தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply