ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கு பற்றக் கூடாது
இந்தியன் பிரிமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகளில் பங்குகொள்ள இலங்கை வீரர்களை அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கை அடங்கிய மனுவொன்று இன்றைய தினமும் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு ஸ்ரீலங்கா கிரிக்கட்டிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ராவண அதிகாரம் என்ற அமைப்பினால், இந்த மனு கையளிக்கப்பட்டது.
இதேவேளை, நேற்றைய தினம் தேசிய சங்க சம்மேளனத்தினால் இதேபோன்ற மனு முன் வைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இலங்கை வீரர்களுக்கு இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில், கலந்து கொள்ளாதிருக்கும் வகையில் ஏற்பட்ட நிலைமைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply