வன்னியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 30 மெட்ரிக் தொன் அடங்கிய நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 30 மெட்ரிக் தொன் அடங்கிய நிவாரணப் பொருட்கள் நேற்று புதுமாத்தளன் பகுதிக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினூடாக அனுப்பப்பட்டுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவித்தன. 20 தொன் மா, 6 தொன் தானிய வகைகள் மற்றும் 4 தொன் சீனி போன்றன அந்த நிவாரணப் பொருட்களில் அடங்குவதாகக் கூறப்படுகின்றது.

பொருட்களைக் கொண்டு செல்வதற்கான போக்குவரது வசதிகளை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான கப்பல் ஒன்றே ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

மேற்படி கப்பல் செஞ்சிலுவைச் சங்கக் கொடிகளைப் பறக்கவிட்டபடியே பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதாகவும் காயமடைந்தோருக்கான சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் விடுத்துள்ள தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply