மாலைதீவு இலங்கைக்கு எதிராக சர்வதேச அரங்கில் செயற்படாது

மாலைதீவு இலங்கைக்கு என்றும் நட்புநாடு. இலங்கைக்கு எதிராக சர்வதேச அரங்கில் கொண்டுவரப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கும் மாலை தீவு ஆதரவு வழங்காது என மாலை தீவின் முன்னாள் ஜனாதிபதி மாமூன் அப்துல் கையூம், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வரிடம் தெரிவித்து ள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மாலைதீவுக்குச் சென்றிருந்த ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூமை சந்தித்தி ருந்தார்.

இலங்கையில் நீண்டகாலம் நிலவிய பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து சாதனை படைத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே என்பதைத் தன்னிடம் சுட்டிக்காட்டியிருந்த அப்துல் கையூம், அவருக்கு எதிராக சர்வதேசத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் வேதனையளிப்பதாகவும் கூறியதாக அஸ்வர் எம்.பி தெரிவித்தார்.

மாலைதீவு, இலங்கையுடன் நீண்ட காலமாக நட்புறவைக் கொண்டநாடு. எனவே, இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் எந்த நடவடிக்கைக்கும் மாலைதீவு ஆதரவு வழங்காது என்பதையும் அப்துல் கையூம் தன்னிடம் தெளிவாகக் கூறியதாகவும் அஸ்வர் எம்.பி மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply