மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த ஜே.வி.பி நடவடிக்கை
அரசாங்கத்தின் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக ஏப்ரல் முதல் வாரத்தில் பாரிய மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஜே.வி.பி நடவடிக்கை எடுத்துள்ளது. பேருந்து கட்டண அதிகரிப்பு, மின் கட்டண அதிகரிப்பு, பொருட்களின் விலை உயர்வு ஆகிய மக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளதுடன், பிரதான ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 2 ஆம் திகதி தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 3 ஆம் மாத்தறையிலும், 7 ஆம் திகதி கம்பாஹாவிலும், ஆர்ப்பாட்டங்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் பின்னர், கொழும்பிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply