வவுனியா நிவாரண கிராமங்களுக்கு ஹோம்ஸ் இன்று விஜயம்

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதி செயலாளர் நாயகம் சேர். ஜோன் ஹோம்ஸ் இன்று 20 ஆம் திகதி வவுனியாவுக்கு விஜயம் செய்கிறார்.

வன்னியில் புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள மக்களுக்கென வவுனியாவில் அமைக்க ப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களையும் அவர் பார்வையிடவுள்ளார்.

புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள 35 ஆயிரத்து 756 பொதுமக்கள் 13 நிவாரணக் கிராம ங்களில் தங்கியுள்ளனர்.

வவுனியாவுக்கு விஜயம் செய்யும் ஐ. நா. வின் பிரதி செயலாளர் நாயகத்திற்கு அரசாங்கத்தின் மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. தெளிவுபடுத்தவிருக்கிறார் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கூறினார்.

இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஐ. நா. பிரதி செயலாளர் நாயகம் நாளை சனிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply