புலிகள் இயக்கம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு இலங்கை வரவேற்பு
புலிகள் இயக்கம் தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டை அர சாங்கம் வரவேற்றுள்ளது.இந்திய அரசாங்கத்தின் நிலைப் பாட்டை வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி லோக்சபாவில் தெளிவு படுத்தியுள்ளமையை அரசாங்கம் வரவேற் பதாக அமைச்சரவைப் பேச்சாளரான தகவல் ஊடக்கத்துறை அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
“இந்தியாவின் நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தியபோது அமளி துமளி ஏற்பட்டதாக அறிகிறோம். என்றாலும் புலிகள் இயக்கம் தொடர்பில் இந்தியா எடுத்துள்ள நிலைப்பாடு பாராட்டுக்குரியது” என்று அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் யாப்பா இத னைத் தெரிவித்தார்.
அமைச்சர்கள் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, அரசாங்க தகவல் திணைக் களப் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட ஆகியோரும் இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண் டனர். பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்
ஐ.நா. பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த பேராசிரியர் பீரிஸ், “எம்மிடம் ஒளிவு மறைவு கிடையாது.
மறைப்பதற்கு ஏதும் இல்லை. எவர் வேண்டுமானாலும் வந்து நிலைமையைப் பார்வையிடலாம். ஆனால் இலங்கையின் இறையாண்மையைப் பாதிக்க அனுமதிக்க முடியாது. இங்கு ஒரு உயர்ஸ்தானிகர் இருக்கின்றபோது விசேட பிரதிநிதிகள் அவசியமில்லை” என்று தெரிவித்தார்.
அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறுகையில், “சமாதானம் நிலை நிறுத்தப்பட்டதும், தற்போது இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது சொந்தக் கிராமங்களில் குடியமர்த்தப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply