பிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியின் முன்னணி அறிவிப்பாளர் உதயகுமாருக்கு புலிகள் கொலைப்பயமுறுத்தல்
பிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியின் முன்னணி அறிவிப்பாளரும் அரசியல்அரங்கம் நிகழச்சித் தொகுப்பாளருமான உதயகுமாருக்கு பாரிஸில் புலிகள் கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றனர்.நேற்று (பெப்ரவரி 18) மாலை பிரான்சின் புறநகர் பகுதியான டிரான்சி என்னுமிடத்திலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற மூன்று இனந்தெரியாத புலி உறுப்பினர்கள் வீட்டிலிருந்த அவரது மனைவியிடம் அரசியல்அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்துமாறும் இல்லையேல் பயங்கர விளைவுகளைச் சந்திக்கவேண்டி வரும் என்று அவரது கணவரிடம் தெரிவிக்குமாறும் கூறிச் சென்றுள்ளனர்.
ரிஆர்ரி தமிழ்அலை வானொலியையும் ரிபிசி வானொலியையும் நாம் பார்க்கவேண்டிய விதத்தில் பார்த்துக்கொள்வோம். ஆனால் உங்கள் கணவர் அரசியல்அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று திருமதி உதயகுமாரிடம் இந்த புலிகள் கூறிச்சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக டிரான்சி பொலிசில் உதயகுமார் தரப்பில் முறையிடப்பட்டுள்ளதுடன் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக தெரியவருகின்றது.
ரிஆர்ரி வானொலியில் இடம்பெற்றுவரும் அரசியல் நிகழ்ச்சிகளான உறவுப்பாலம், அரசியல்அரங்கம் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளையும் உதயகுமார் அவர்களே தொகுத்து வழங்கிவருகின்றார்.
புலம்பெயர்மண்ணில் வாழும் அரசியல் விமர்சகர்களில் முக்கியமானவராக கருதப்படும் உதயகுமாரின் அந்த இரண்டு நிகழ்ச்சிகளும் மிகவும் பிரபல்யம்வாய்ந்தவை.
உறவுப்பாலம் நிகழ்சி வாராவாரம் ஒரு அரசியல் பிரமுகரை நேயர்கள் நேரடியாக கேள்வி கேட்கும்வகையில் அமைந்தது. கடந்த வாரம் அமைச்சரும் ஈபிடிபி செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்ததுடன், உதயகுமாருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்சியில் கூட்டணித் தலைவர் வி.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் த. சித்தார்த்தன், ஈபிஆர்எல்எவ் செயலாளர் ரி. சிறிதரன்,சிறீ ரெலோ உதயன் போன்றவர்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..
கிழக்குமாகாண முதலமைச்சர் பிள்ளையான் முதல்தடவையாக தமிழ்மக்களை ஊடகம் ஒன்றின் ஊடாக மக்களைச் சந்தித்ததும் இந்த நிகழச்சியினுடாகவே என்பது குறிப்படத்தக்கது.
ஞர்யிறுதோறும் இடம்பெறும் அரசியல்அரங்கம் நிகழ்ச்சியும் மிகவும் பிரபல்யமானது. வாராவாரம் முக்கிய அரசியல் நிகழ்வுகளின் தலைப்பில் நேயர்கள் தத்தமது கருத்துக்களை முன்வைக்கும் இந்த நிகழ்ச்சியில் புலிகளின் பாசிச நடவடிக்கைகளை நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் வெளிப்படுத்தும் அதேவேளை, புலிகளின் ஆதரவாளர்களும் இந்தநிகழ்ச்ப்யில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு இடமளிக்கபட்டு வருகின்றது.
ஆனால் கடந்த சில வாரங்களாக அந்த நிகழச்சியில் கலந்துகொள்ளும் புலிகள் மிகக் கேவலமாக அந்த நிகழச்சியையும் வானொலியின் இயக்குநர் குகநாதனையும் தனிப்பட்டவகையில் தாக்கிவருவதை அவதானிக்க முடிகின்றது.
கடைசிக்கட்டத்தில் சேடம் இழுத்துக்கொண்டிருக்கும் புலிகள், தமது தோல்வியை மறைக்க இப்போது தம் உண்மை முகங்களை வெளிச்சம்போட்டுக் காட்டிவரும் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் குறிவைக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply