ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்!

தமிழக்தின் முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கனடாவில் இயங்கும் தமிழ் அமைப்பு ஒன்று  கடிதம் ஒன்றின் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்தால், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெனாசிர் புட்டோவுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும் ஏற்படும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் புலிகளின் விடயத்தில் தலையிட வேண்டாம் எனவும் பெண் என்பதால் இதுவரை பொறுத்திருந்ததாகவும் எனி என்னாகும் என்பதை யாரறிவார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மைந்தன், உலக தமிழின பாதுகாப்பு கழகம், பாங்கொக், தாய்லாந்து என்ற பெயரில் இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதன் தலைமையகம் கனடாவில் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த மின்னஞ்சல் மலேசியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செல்வி ஜெயலலிதாவின் வழங்கறிஞர் நவநீதகிருஷ்ணன் நீதிபதியிடம் நேரடியாக  முறைப்பாடு செய்துள்ளார்.

புலிகள் இயக்கத்தினர் வன்னியில் தமிழ் மக்களை தமக்கு கேடயங்களாப் பயன்படுத்தி வருகின்றனர் எனவும் அவர்களை அங்கிருந்து வெளியேற புலிகள் அனுமதி வழங்காமல் கொடூரப்படுத்தி வருவதாக அண்மையில் ஜெயலலிதா ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply