வவுனியா இடைத்தங்கல் முகாம்களிலுள்ள முதியோர்கள் உறவினருடன் சென்று வசிக்க ஏற்பாடு

வன்னிப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்து, வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உறவினர்களுடன் சென்று வசிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்து வந்துள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் உறவினர்கள் எவரேனும் வவுனியா பிரதேசத்தில் வசித்தால், அவர்கள் இவர்களைப் பொறுப்பேற்று அழைத்துச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயோதிபர்களின் பெயர் விபரங்கள், உறவுமுறை என்பவற்றுடன் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்து வந்துள்ளவர்களில் பல வயோதிபர்கள் தனிமையில் வந்துள்ளார்கள் என்பதுடன் பெரும்பாலானவர்கள் உறவினர்களுடனும் குடும்பத்துடனும் வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வந்துள்ளவர்களில் பலர் சுயமாக தமது தேவைகளைக் கவனிக்க முடியாதவர்களாகவும் நிரந்தர நோயாளிகளாகவும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply