கச்சதீவு கடற்பரப்பில் கேரள கஞ்சா கடத்தல்:

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 100 கிலோ கிராம் எடையுள்ள கேரளா கஞ்சாவை கடத்திய ஆறு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் கச்சதீவு கடற்பரப்பில் சிறிய படகொன்றை பயன்படுத்தி கஞ்சாக் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே அதிகாலை வேளை அந்த படகை முற்றுகையிட்ட கடற்படையினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களில் நான்கு இந்தியர்களும் இரண்டு இலங்கையர்களும் அடங்குவதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:
வடக்கில் கச்சதீவு கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கைக் கடற்படையினர் ‘உதார’ என்ற கப்பல் மூலம் கச்சதீவு கடற்பகுதியில் சிறிய ரக படகு ஒன்று செல்வதை அவதா னித்துள்ளனர். குறித்த படகை வழிமறித்து முற்றுகையிட்ட கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல்

நடவடிக்கையின் போது குறித்த படகிலிருந்து நான்கு இந்தியர்களை கைது செய்துள்ளதுடன் அந்தப் படகிலிருந்து 100 கிலோ எடையுள்ள கேரளா கஞ்சாவையும் ஜி.பி.எல். இயந்திரத்தையும் மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை இந்திய படகில் கொண்டு வரப்பட்ட கஞ்சாவை கொள்வனவு செய்வதற்காக டில்கி படகு மூலம் வருகைதந்திருந்த இரு இலங்கையர்களையும் கைது செய்துள்ளனர்.

ஆறு சந்தேக நபர்களையும் கைப்பற் றப்பட்ட கஞ்சா மற்றும் பொருட்களையும் மேலதிக விசாரணைக்காக நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைத் துள்ளனர்.

கடற்படையினால் அண்மைக்காலத்திற்குள் கைப்பற்றப்பட்டகேரளா கஞ்சாவில் அதிகூடிய தொகை இதுவாகும் என்றும் கடற்படைப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

கடல்வழியைப் பயன்படுத்தி சட்டவிரோ தமாக அவுஸ்திரேலியாவுக்கு பயணித்தல், போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகள் இடம்பெறுவதை தடுக்கும் வகையில் இலங்கை கடற்பரப்பின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் போதிய அளவு கடற்படையினரும் கடற்படை படகுகளும் ரோந்து, கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தாகவும் தெரிவித்த அவர்,

இதன் காரணமாகவே ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட இந்த கஞ்சா கடத் தல் நடவடிக்கையை முறியடிக்க முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.

திட்டமிட்ட அடிப்படையில் கடற்படை யின் ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளதன் மூலமே வெற்றிகரமாக இந்த அதிரடி முற்றுகை நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை கடற்படையினருக்கு முடிந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

எனவே, தான் கடத்தல் நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்னரும் கடல் வழியை பயன்படுத்தி அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்வதற்கு முன்னரும் முற்றுகையிட்டு கைது செய்ய முடிந்துள்ளது என்றார்.

வடக்கு, கிழக்கில் பல்வேறு பிரதேசங்களில், நாட்டின் பல பிரதேசங்களில் அண்மைக்காலமாக கேரளா கஞ்சா தொடர்ச்சியாக கைப்பற்றப்பட்டு வந்த நிலையிலேயே இவற்றை கட்டுப்படுத்த கடற்படை கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை விமானம் மூலம் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதையும், உள்ளூர் கஞ்சா மற்றும் போதைப் பொருள் உற்பத்தியை கட்டுப்படுத்தவும் முப்படையினரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின் றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply