மன்னார் ஆயருடன் ரணில் சந்திப்பு
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நேற்று பிற்பகல் மன்னார் ஆயர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இந்தச் சந்திப்பின்போது வடக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மன்னார் ஆயர் எதிர்க்கட்சித் தலைவருக்கு விரிவாக எடுத்துக்கூறியுள்ளார். இந்தச் சந்திப்பில் மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் காணாமல்போயுள்ள 472 பேருடைய விபரங்கள் காணாமல்போன உறவுகளைத் தேடும் அமைப்பினரால் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி.க்களான ஜெயலத் ஜெயவர்தன, ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆயருடனான சந்திப்புக்கு முன்னர் மன்னார் மூர் வீதியில் ஐ.தே.க.வின் முக்கியஸ்தர்கள் மற்றும் முஸ்லிம் மதப் பிரமுகர்களையும் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர். இந்தச் சந்திப்பில் கொழும்பு மாநகரசபையின் மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில், மேல்மாகாணசபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதனைடுத்து மனனார் நகரசபை மண்டபத்திலும் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. இதில் மீனவ சங்கப் பிரதிநிதிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாதர் கிராம, சங்கங்களின் பிரதிநிதிகள் வர்த்தகர்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் மீனவர்கள், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply