பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வை இலங்கையில் நடத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை!
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வை இலங்கையில் நடத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இலங்கையில் நடத்தக் கூடாது என சுமந்திரன் லண்டனில் பிரச்சாரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் ஊடகவியலாளர் அமைப்பின் அழைப்பை ஏற்று தாம் லண்டனுக்கு விஜயம் செய்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் பின்பற்றப்படவில்லை என்பதனை தாம் வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் அரசாங்கம் உள்நாட்டு மற்றும் சர்வதேச கோரிக்கைகளை உதாசீனம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
வட பகுதிகளில் பாரியளவில் காணிகளை அரசாங்கம் சுவீகரித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக யுத்த நிறைவினைத் தொடர்ந்து அரசாங்கம் இராணுவ பலத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்வதில் அதிக நாட்டம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வை நடத்தக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாற்றுக் கொள்கைகளுக்காக கேந்திர நிலையம் மற்றும் க்ளோபல் தமிழ் போரம் அமைப்பு ஆகியன பிரச்சாரம் செய்ததாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply