இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை தடுக்காவிட்டால் 40 எம்.பி.க்களும் ராஜிநாமா செய்ய வேண்டும் : தமிழக பாஜக

இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறாமல் தடுக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பி.க்களும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு புறக்கணித்து வருவது வருத்தம் அளிக்கிறது. பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆனாலும், இலங்கையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வருகின்றன. அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இலங்கையில் மாநாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

எனவே, தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 மக்களவை உறுப்பினர்களும் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறாமல் தடுக்குமாறு வலியுறுத்த வேண்டும்.

இதனை பிரதமர் ஏற்கவில்லை என்றால் 40 எம்.பி.க்களும் ராஜிநாமா செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply