கார் குண்டு வெடிப்பில் தப்பிய சிரியா பிரதமர்
மேற்காசிய நாடான, சிரியாவில் நடந்த குண்டு வெடிப்பில், அந்நாட்டு பிரதமர், மயிரிழையில் உயிர் தப்பினார்; அவரது காவலர், பலியானார்; டிரைவர் படுகாயமடைந்துள்ளார்.சிரியா நாட்டில், அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக, கிளர்ச்சியாளர்கள் இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இரு தரப்புக்கும் நடந்த சண்டையில், 80 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஐந்து லட்சம் பேர், அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சிரியா ராணுவம், ரசாயன ஆயுதம் பயன்படுத்துவதாக, அமெரிக்கா புகார் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அந்நாட்டு பிரதமர், வாஎல் அல்-ஹக், மசே என்ற நகர் வழியாக காரில் சென்ற போது, திடீரென கார் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில், பிரதமரின், கார் டிரைவர் படுகாயமடைந்தார். பாதுகாவலர் பலியானார். அதிருஷ்டவசமாக, பிரதமர் வாஎல், காயமின்றி தப்பினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply