4603 மில்லியன் ரூபாவை அறவிடுவதில் தீவிரம் – ஆணையாளர் வீரக்கோன்
ஊழியர் சேமலாப நிதியத் துக்கு அங்கத்துவ பணத்தை செலுத்தாத 13,134 முதலா ளிமாரிடமிருந்து 4603 மில் லியன் ரூபாவை அறவிட ஊழியர் சேமலாப நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்துக்குப் பணம் செலுத்தாத முதலாளிமார் தொடர்பாக தொழில் திணைக்களத்தின் பிரதான அலுவலகமும் அதனோடு தொடர்பான 52 நிறுவனங்களும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஊழியர் சேமலாப நிதிய ஆணையர் டீ. பீ. கே. ஆர். வீரக்கோன் தெரிவித்தார்.
ஊழியர் சேமலாப நிதியத்துக்குப் பணம் செலுத்தாமல் சிகப்பு அறிவித் தல்களையும் தவிர்த்துக்கொண்டு இருக்கும் 2991 முதலாளிமாரிடமிருந்து 1387 மில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொள்வதற்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
7874 முதலாளிமார்களுக்கு இறுதி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
தொழிலாளர் உரிமையான ஊழியர் சேமலாப நிதியத்தில் அங்கத்துவம் வழங்கி அதன் அனுகூலங்களை மக்க ளுக்குப் பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப் படுத்தப்படுமென ஆணையர் வீரக்கோன் தெரிவித்தார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply