இலங்கையர்களை ஜெர்மனிக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கும் கும்பல் கைது
இலங்கையர்களை ஜெர்மனிக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கும் இந்திய கும்பலை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை சட்டவிரோதமான முறையில் ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் குறித்த கும்பல் ஈடுபட்டிருந்தாகக் குறிப்பிடப்படுகிறது.ராமநாதபுரம் பிரதேசத்தில் இந்த இருவர் அடங்கிய கும்பலை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். போலியான இந்தியக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பி வைக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து 71 போலிக் கடவுச் சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.சந்தேக நபர்களிடமிருந்து 11.5 இலட்ச ரூபா இந்தியப் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply