இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு: அமெரிக்க நிதி நிராகரிப்புக்கு காரணம் : ஹக்கீம்
அமெரிக்காவின் நிபந்தனைகள் இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் இருந்தமையின் காரணமாகவே அந்த நாடு வழங்கிய நிதியுதவியை நிராகரித்ததாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இலங்கையின் நீதித்துறை மறுசீரமைப்புத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட 450 மில்லியன் ரூபா நிதியுதவியை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா அண்மையில் விலக்கிக் கொண்டது. இலங்கை அதிகாரிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாதமையின் காரணமாக நிதியுதவியை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு என்ற வகையில் நன்கொடைக்கான நிபந்தனைகள் ஏற்க கூடியவாறு இருக்கவில்லை என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply