தேடப்படும் பெண் தீவிரவாதி தலைக்கு 20 லட்சம் டாலர் சன்மானம்: அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்காவின் போலீஸ் அதிகாரிகளை கொன்ற பெண்ணை தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இணைத்துள்ள அமெரிக்க அரசு அவளது தலைக்கு 20 லட்சம் டாலர் சன்மானம் அறிவித்துள்ளது.கருப்பர்கள் விடுதலை ராணுவம் என்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஜோவன் செசிமர்ட் என்ற இந்த பெண், முதன்முதலாக 1973ம் ஆண்டு போக்குவரத்து காவலர் ஒருவரை சுட்டுக் கொன்றார்.பின்னர், பல்வேறு போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்ற இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 1977ம் ஆண்டு நடைபெற்ற விசாரணையில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

1979 ஆண்டு சிறையில் இருந்து தப்பிய இவர், 5 ஆண்டு காலம் அமெரிக்காவில் தலைமறைவாக வாழ்ந்தார். அங்கிருந்து கியூபா நாட்டிற்கு தப்பிச் சென்று ‘புரட்சியும் தீவிரவாதமும்’ என்ற தலைப்பில் ஆங்காங்கே விவாத மேடைகளை நடத்தி அமெரிக்காவுக்கு எதிரான தீவிரவாதிகளை அணி திரட்டி வருகிறார்.

அசாட்டா ஷக்கூர் என்ற புதிய பெயருடன் கியூபாவில் இருக்கும் இவரை உயிருடனோ, பிணமாகவோ ஒப்படைப்பவர்களுக்கு 20 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என நியூஜெர்சி மாகாணம் அறிவித்துள்ளது.

தேடப்படும் பெண் தீவிரவாதிகள் பட்டியலில் முதல் இடத்தில் இவரது பெயரை எப்.பி.ஐ. போலீசார் அறிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply