எகிப்து பிரதமர் கார் மீது சூப்பாக்கி சூடு: 5 பேர் கைது
எகிப்து பிரதமர் ஹிஷாம் காண்டில். நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் இவர் தலைநகர் கெய்ரோ புறநகர் பகுதியில் காரில் சென்றார். அவருடன் அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்களும் கார்களில் சென்றனர். ஒரு இடத்தில் பிரதமர் காண்டிலின் கார் கடந்து சென்றது. அப்போது, ரோட்டில் மற்றொரு வாகனத்தில் சென்றவர்கள் பிரதமர் கார் மீது துப்பாக்கியால் சுட்டனர்.இச்சம்பவத்தில் பிரதமர் காண்டிலுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையே அந்த வாகனத்தை பிரதமரின் பாதுகாவலர்கள் விரட்டி சென்றனர். ஆனால், அதில் இருந்த நபர்கள் இவர்களையும் சுட்டு விட்டு தப்பி ஓட முயன்றனர். இருந்தும் அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
வாகனத்தில் 5 பேர் இருந்தனர். அவர்களுக்கு 18 முதல் 29 வயது இருக்கும். பின்னர் அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். பிரதமர் கார் மீது துப்பாக்கியால் சுட்டது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply