பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வைத் தடுக்க புலி ஆதரவு அமைப்புக்கள் முயற்சி : ரொஹான் குணரட்ன
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை தடுக்க தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் முயற்சித்து வருவதாக பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்ற நிலையிலிருந்து பிரச்சார நிறுவனமாக மாற்றமடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.க்ளோபல் தமிழ் போராம் என்ற அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் நகல் அமைப்பாக சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் செயற்பட்டதனைப் போன்றே இன்று க்ளோபல் தமிழ் போரம் அமைப்பும் செயற்பட்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சமூகம் இலங்கை நிலைமைகளை நேரில் பார்வையிடக் கூடாது என்ற காரணத்தினால், இவ்வாறு புலி ஆதரவு அமைப்புக்கள் பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டால் உலகின் பல நாட்டுத் தலைவர்கள் நாட்டின் நிலைமைகளை நேரில் பார்வையிட வழிகோலும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமயை தடுத்து நிறுத்தி போலிப் பிரச்சாரங்கள் மூலம் நாட்டுக்கு தொடர்ந்தும் அபகீர்த்தி ஏற்படுத்த புலி ஆதரவு அமைப்புக்கள் தீவினை முனைப்பு மேற்கொண்டு வருவதாக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply