சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்: 45 வீரர்கள் பலி
சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், 45 வீரர்கள் கொல்லப்பட்டனர்; 150 பேர் படுகாயமடைந்தனர். சிரியா அதிபர், பஷர் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள், கடந்த, இரண்டு ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில், 80 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்; ஐந்து லட்சம் பேர் அகதிகளாகி, அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளன.சிரியாவில் நடக்கும் சண்டையில், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக, சர்வதேச பார்வையாளர்கள், புகார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, சிரியாவில், தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அதை சுற்றியுள்ள, மூன்று ஆயுத கிடங்குகள் மீது, இஸ்ரேல் நேற்று முன்தினம், திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த பயங்கர தாக்குதலில், 45 வீரர்கள் பலியாயினர்; ஏராளமான வீரர்கள் படுகாயமடைந்தனர். லெபனான் நாட்டில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு சப்ளை செய்வதற்காக, இந்த கிடங்குகளில் ஏவுகணைகள் வைக்கப்பட்டிருந்ததாகவும், இதை அழிப்பதற்காக தான் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரேலின் இந்த அதிரடி தாக்குதலுக்கு, ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply