வடகொரியாவில் தயார் நிலையில் இருந்த ஏவுகணைகள் அகற்றம்

தென்கொரியா இடையே சமீபத்தில் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. தென்கொரியா, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப் போவதாகவும் வடகொரியாக மிரட்டியது. அதற்காக ஏவுகணைகளையும் நிலைநிறுத்தியது. தற்போது தாக்குதலுக்கு தயாராக வைத்திருந்த இரண்டு ஏவுகணைகளையும் வடகொரியா விலக்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆசியாவின் வடக்குப் பகுதியில் நிலவிய பதற்றம் குறைந்துள்ளது.வடகொரிய அரசு சென்ற முறை, அணுஆயுதப்போர் குறித்து பிரச்சினைகளை ஏற்படுத்தியது போன்று இந்த முறை 3,500 மைல்கள் தூரம் வரை சென்று வெடிக்கக்கூடிய ‘முசுடன்’ ஏவுகணைகளை ஏவலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் தற்போது அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வடகொரியா ஏவுகணைகளை நகர்த்தியுள்ளது என்றும், அதனால் உடனடித் தாக்குதல் எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வடகொரியா தெளிவான முடிவுக்கு வரவேண்டும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

ஆனால் இதுவரை  வடகொரியத் அதிபர் கிம் ஜோங் உன்னின் நடவடிக்கை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply