பொதுநலவாயமாநாட்டில் இளவரசர் சார்ள்ஸ் பங்கேற்பு
இலங்கையில் நடைபெற விருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய மாகாராணி சார்பில், இளவரசர் சார்ள்ஸ் கலந்துகொள்வார் என பொது நலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா அறிவித்துள்ளார்நீண்டதூரம் பயணம் செய் வதைத் தவிர்க்கும் நோக்கில் பிரித்தானிய மகாராணி எடுத் திருக்கும் இத்தீர்மானத்துக்கு மதிப்பளித்து, இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கு இளவரசர் சார்ள்சை வரவேற்பதாக கமலேஷ் சர்மா விடுத்திருக்கும் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுபிரித்தானிய மகாராணியின் வைர விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ் வுகளில் மகாராணியைப் பிரதிநிதித் துவப் படுத்தி அரச குடும்பத் தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமையையும் கமலேஷ் சர்மா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி யுள்ளார்.
மகாராணியின் இந்தத் தீர்மானத்துக்கு பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் மதிப்பளிக்கின்றன. பொதுநலவாய அமைப்பின் தலைவர் என்ற வகையில் இந்த அமைப்புக்கு மகாராணி தொடர்ந்து வழங்கிவரும் அர்ப்பணிப்புட னான ஒத்துழைப்புக்கு நாம் மதிப் பளிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்பின் தலைவர் என்ற ரீதியில் தனது பிரதிநிதியான இளவரசர் சார்ள்சை, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கு அனுப்பியதன் மூலம் மகாராணியின் ஒத்துழைப்பு தொடர்ந்துள்ளது.
பொதுநலவாய அமைப்புக்கும், இளவரசர் சார்ள்சுக்குமிடையில் பல வருடங்களாக நெருக்கமான தொடர்புகள் உள்ளன. பொதுநலவாய அமைப்பின் செயற்பாடுகளுக்கு அவர் பூரண ஒத்துழைப்பு வழங்கிவருகிறார். 2007 ஆம் ஆண்டு உகண்டாவில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிலும் இளவரசர் சார்ள்ஸ், மகாராணியை பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்து கொண்டிருந்தார்.
பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு நன்கு அறியப்பட்டவரான இளவரசர் சார்ள்ஸ் கொழும்பில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதையிட்டு மகிழ்ச்சியடைவதுடன், அவரை வரவேற்பதாகவும் பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் குறிப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply