சனாஉல்லா உயிரிழந்தது குறித்து நீதி விசாரணை நடத்த பாகிஸ்தான் வலியுறுத்தல்
காஷ்மீர் சிறையில் பாகிஸ்தான் கைதி தாக்கப்பட்டு உயிரிழந்தது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் அய்சாஸ் அகமது இவ்வாறு கூறியுள்ளார்.1999-ஆம் ஆண்டு, தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சனாஉல்லா, கடந்த 14 ஆண்டுகளாக ஜம்மு- காஷ்மீரின் கோட் பால்வால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 52 வயதான சனாஉல்லா, கடந்த 3-ஆம் தேதி சிறையில் உள்ள சக கைதி ஒருவரால் தாக்கப்பட்டார்.
இதில், பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு சென்ற சனா உல்லாவுக்கு, சண்டிகர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். இந்நிலையில், சனாஉல்லா-வின் உடல் பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply