புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற வகையில் இரா. சம்பந்தனின் கருத்து அமையப் பெற்றுள்ளமை வருத்தமளிக்கிறது : அனுர பிரியதர்சன யாபா

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு சார்பாக செயற்படுவோர் தொடர்பில் சமூகம் பொறுமையிழந்துள்ளதாக அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். வன்னியில் இடம்பெற்று வரும் உண்மையான நிலைமைகளை மூடிமறைத்து புலிகளுக்கு ஆதரவான வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிட்டு வருகின்றமை அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற வகையில் சம்பந்தனின் கருத்து அமையப் பெற்றுள்ளமை வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

வன்னியில் இடம்பெற்று வரும் யுத்த முன்நகர்வுகள் குறித்து சிங்கள மக்களுக்கு தெளிவான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட யுத்த நிறுத்த காலங்களின் போது என்ன நேர்ந்தது என்பது குறித்து சம்பந்தன் சற்று நினைத்து பார்க்க வேண்டுமென அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். இவ்வாறான பக்கச்சார்பான கருத்துக்களின் மூலம் சர்வதேச சமூகத்தின் வெறுப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சம்பாதிக்க நேரிட்டு விட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply