9/11 பாணியில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதே புலிகளின் திட்டம்

பாரிய தற்கொலைத் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்காகவே புலிகளின் இரு விமானங்களும் கொழும்பு மற்றும் கட்டுநாயக்க விமான நிலையப் பிரதேசங்களுக்குள் பிரவேசித்ததாக விமானப்படை பேச்சாளரான விங்கமாண்டர் ஜானக நாணயக்கார தெரிவித்தார். கொழும்பு, கொம்பனித் தெருவிலுள்ள விமானப் படைத் தலைமையகம் மீதும் கட்டுநாயக்க விமான நிலைய பிரதேசத்திலுள்ள கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மீதும் 9/11 பாணியில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி பாரிய அழிவை ஏற்படுத்துவதே அவர்களது திட்டமாகவிருந்தது.

கட்டுநாயக்க பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் 140 கிலோ கிராம் எடை கொண்ட சி-4 ரக வெடி மருந்துகள் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கொம்பனித் தெருவிலுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டடத் தொகுதிக்கு மேல் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த புலிகளின் விமானம் மீது விமானப் படையினர் நடத்திய தாக்குதலின் போது புலிகளின் விமானம் வானத்திலேயே வெடித்துச் சிதறியதாகத் தெரிவித்த விமானப் படைப் பேச்சாளர், இவ்வாறு வெடித்துச் சிதறுவதற்கு சி-4 ரக வெடிமருந்தே காரணமாகவிருந்திருக்கலாமெனவும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply