இலங்கைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு மாகாண சபைக்கு மேலும் அதிகாரங்கள் தேவை :அமைச்சர் பிரணாப் முகர்ஜி
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்படவேண்டும். இராணுவ நடிவடிக்கைள் மூலம் இதனை எட்ட முடியாது. ஆகவே இருதரப்பினரும் மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலமொன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இம்மதாத இறுதியில் தாம் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் கோரிக்கைகளை இலங்கை அரசிடம் தெரிவிக்கவுள்ளேன்.
1987 ஆம் செய்து கொள்ளப்பட்ட இந்திய -இலங்கை ஒப்பந்தம் குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரணாப் முகர்ஜி, அதிகாரத்தைப் பரவலாக்குவதுடன் மாகாண சபைக்கு மேலும் அதிகாரங்களை வழங்க வேண்டுமெனவும் தெரிவித்தார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply