ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை குறித்து விளக்கம்: பிரித்தானியா

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இலங்கை நிலைமை தொடர்பாக விளக்கமளிக்கும் மெக்சிக்கோவின் தீர்மானத்துக்கு பிரித்தானியாவும் தனது ஆதரவுக் குரலை வெளிக்காட்டியுள்ளது. 
 
இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் விளக்கமளிக்கப்பட வேண்டுமென ஐ.நா.வுக்கான பிரித்தானியத் தூதுவர் ஜோன் சவெர்ஸ் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களின் தலைவர் சேர் ஜோன் ஹோல்ம்ஸ் இலங்கைக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்பிய பின்னரே பிரித்தானியா இவ்வாறு கூறியுள்ளது.

எனினும், சேர் ஜோன் இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு வந்தவுடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் விளக்கமளிப்பது சாத்தியப்படாது என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீமூனின் பேச்சாளர் மிஷேல் மொன்டாஸ் தெரிவித்தார்.

ஜோன் ஹோல்ஸ் கொலம்பியாவுக்குச் செல்லவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த சில வாரத்துக்கு முன்னர் இலங்கைப் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் விளக்கமளிக்கும் பிரேரணையொன்றை மெக்சிக்கோ முன்வைத்தது. இதற்கு பிரித்தானியாவும், ரஷ்யாவும் எதிர்ப்புத் தெரிவித்தன.

இதன் பின்னர் இலங்கை விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுண், விசேட பிரதிநிதியயொருவரை நியமித்தார். எனினும், இந்த நியமனத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துவிட்டது.

இந்த நிலையில் இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் விளக்கமளிக்கப்படவேண்டுமெனப் பிரித்தானியா தற்பொழுது கோரியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply