புலிகளின் விமானங்கள் தாழ்வாகப் பறந்ததால் விமானப் படையினரால் விமானத் தாக்குல் நடத்த முடியவில்லை :பிரிகேடியர் ஜானக நாணயக்கார
கட்டுநாயக்கவிலுள்ள விமானப் படைத்தளத்தின் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் தோல்வியடைந்தமைக்குக் காரணம் புலிகளின் விமானத்தைச் செலுத்தி வந்த விமானியின் வலது கையிலேற்பட்ட காயமே.
இலங்கை விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் புலிகளின் விமானியின் வலது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் தாக்குதல நடத்த முடியாத நிலையேற்பட்டிருந்ததாக விமானப் படை ஊடகப் பேச்சாளரான விங்கமாண்டர் ஜானக நாணயக்கார இன்று இன்று தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு சம்பவம்; தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு விமானங்களும் புதக்குடியிருப்புப் பிரதேசத்திலிருந்து புறப்பட்டமையை முதலில் அறிந்து கொண்டவர்கள் அந்தப் பிரதேசத்தில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரே.
கடந்த 20 ஆம் திகதி இரவு இந்த இரு விமானங்களும் சுமார் 8.30 மணியளவில் புதுக்குடியிருப்பிலிருந்து புறப்பட்டமை தொடர்பான தகவல்களை அந்தப் பிரதேசத்தின் படை நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கும் அதிகாரி விமானப் படையினருக்கு உடனடியாகத் தெரிவித்தார்.
புலிகளின் இந்த இரு விமானங்களும் ஒலுமடு, மன்னார், வில்பத்து வழியாக மிகவும் குறைந்த உயரத்திலேயே பறந்து வந்துள்ளன. இரவு 8.40 மணியளவில் இந்த இரு விமானங்களும் 8.40 மணியளவில் வவுனியா ராடரில் தெரிந்துள்ளன. 8.50 மணியளவில் கட்டுநாயக்கவிலுள்ள ராடர் கருவிகளில் இவை காணப்பட்டன. இதனையடுத்து கட்டுநாயக்கவிலிருந்து உடனடியாகப் புறப்பட்ட விமானப் படைக்குச் சொந்தமான எவ்-7 ரக யுத்த விமானம் புலிகளின் விமானங்களை தாக்க முயற்சித்தும் அது கைகூடாமல் போனது. அதற்கான காரணம் புலிகளின் விமானங்கள் 200 தொடக்கம்-300 அடி வரையான குறைந்த உயரத்திலேயே பறந்தமையாகும்.
பின்னர் விமானப் படையினர் நிலத்திலிருந்து மேற்கொண்ட தாக்குதல் காரணமாக அது கீழே விழுந்து நொருங்கியது.
கொம்பனித் தெருவிலுள்ள விமானப் படைத் தலைமையகம் மீது தாக்குதல் நடத்த வந்த விமானத்தின் மீது இலங்கை விமானப் படையினர் நடத்திய தாக்குதல் காரணமாக அது ஆகாயத்திலே வெடித்துச் சிதறி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீது விழுந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply