விடுதலைப்புலிகளின் கடைசி பிரயத்தனமும் படுதோல்வி – அமைச்சர் கெஹலிய

இலங்கைக்கு மாத்திரமின்றி இந்த பிராந்தியத்திற்கே பாரிய அச்சுறுத்தலாக விளங்கிய புலிகளின் விமான பலத்தை எமது பாதுகாப்புப் படையினர் தற்பொழுது முழுமையாக இல்லாதொழித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்றுத் தெரிவித்தார்.

எமது படை நடவடிக்கைகள் மூலம் படுதோல்வி யடைந்த பிரபாகரன் கடைசிப் பிரயத்தனமாகப் பயன் படுத்திய இலகுரக இரு விமானங்களையும் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியமை விமானப் படையினருக்கு கிடைத்த மற்றுமொரு பாரிய வெற்றியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் தாக்குதல் நடத்தும் பொருட்டு வந்த புலிகளின் இரு இலகுரக விமானங்களும் சுட்டு வீழ்த்தப் பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை கொழும்பில் நடைபெற்றது.

கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹெ லிய ரம்புக்வெல்ல மேலும் உரையாற்றுகையில், கடந்த காலங்களில் எமது நாட்டிற்கும்: தேசிய பாதுகாப்புக்கும் இந்த பிராந்தியத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக புலிகளின் வான் நடவடிக்கைகள் விளங்கியது.

பல்வேறு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த புலிகளை இராணுவ நடவ டிக்கைகள் மூலம் குறுகிய பிரதேசத்திற்குள் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முடக்கினர். நீர்மூழ்கிகள், பாரிய குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், நீருக்கடி யில் ஓடக்கூடிய ஸ்கூட்டர்கள் உட்பட பாரிய முகாம்களையும் நாளுக்கு நாள் கைப்பற்றிய பாதுகாப்புப் படையினர் புலிகளின் முக்கிய வளங்களை நிர்மூல மா க்கிய அதேசமயம் அவர்களின் சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் இல்லா தொழித்துள்ளன.

புலிகளின் இலகுரக விமானங்கள் தொடர்பாக பலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்ட போதிலும் அதனை இல்லா தொழிப்பது என்பது எமக்கு பாரிய சவாலாக இருக்கவில்லை. ஏனெனில் புலிகளின் எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள தயாரான நிலையில் எமது பாதுகாப்புப்படையினரும், படைத்தளபதிகளும் இருந்த அதேசமயம் அதற்குத் தேவையான ஆலோசனைகளை ஜனாதிபதி யும், பாதுகாப்புச் செயலாளரும் வழங்கி வந்தனர்.

பாதுகாப்புப் படையினரின் தரைவழி நடவடிக்கைகளை திசை திருப்பும் வகையிலும், பாரிய இழப்புக்களை ஏற்படுத்தும் நோக்குடனுமே புலிகள் தமது இலகு ரக விமானங்களை அனுப்பிவைத்தனர்.

இதுவரை எட்டுத் தடவைகள் புலிகளின் இலகு ரக விமானங்கள் வந்து சென்றுள் ளன. இதனை உதாரணம் காட்டி பலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இன்று அவையனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதுடன் உரிய பதிலடி வழங்கப்பட்டுள்ளது.

எமது முக்கிய வளங்களும், கிபீர், மிக் போன்ற பல்வேறு தாக்குதல் விமானங்கள், முப்படைகளின் தலைமையகங்கள் கொழு ம்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களில் இருப்பதால் கொழும்பே அவர்களின் பிரதான இலக்காக விளங்கியது.

சகல வழிகளையும் பயன்படுத்திய புலிகள் தற்பொழுது படுதோல்வியடைந்த நிலையில் இந்த இலகுரக விமானங்களை பயன்படுத்தி இறுதியாக தற்கொலைத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளமை புலிகளின் கடைசி கட்டத்தை புலப்படுத்து வதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உலகத்திலேயே இலகுரக விமான பலத்தைக் கொண்ட ஒரேயொரு பயங்கர வாத அமைப்பாக புலிகள் விளங்குகின்றனர்.

இது போன்ற ஒரு அமைப்பை இன்று எமது பாதுகாப்புப் படையினர் தோற்கடித்துள்ளனர்.

உலகத்திலுள்ள ஏனைய போராட்ட அமைப்புகளுக்கும் புலிகளின் விமான செயற்பாடுகள் முன்மாதிரியாக அமையலாம் இன்று கூறப்பட்டவர்களுக்கு உரிய பதில் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார மற்றும் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி. கே. பி. தஸநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply