சிவராத்திரியை அனுஷ்டிக்கும் இலங்கை இந்துக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

சிவராத்திரியை அனுஷ்டிக்கும் இலங்கை இந்துக்கள் அனைவ ருக்கும் மகிழ்ச்சி நிறைந்த சிறப் பான எதிர்காலம் அமைய இறையருள் கிடைக்க வேண்டுமென வாழ்த்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும் குறிப்பி டப்பட்டிருப்பதாவது,

இலங்கையிலுள்ள இந்துக்கள் இன்று உலகிலுள்ள ஏனைய இந்துக் களுடன் இணைந்து மகா சிவராத்திரியை அனுஷ்டிக்கின்றனர். இன்றைய நாள் இந்துக்களின் சமய அனுஷ்டானங்களில் முக்கிய மானதொரு நாளாகும். இந்துக்களின் முழு முதற்கடவுளாகிய சிவபெருமானை நினைத்து வழிபடும் நாள் இதுவாகும்.

இன்றைய நாளில் இந்துக்கள் விரதம் இருத்தல், இரவு முழுவதும் கண்விழித்திருத்தல், விளக்கேற்றுதல், தேவார த்திருவாசகங்களை உச்சாடனம் செய்தல், சிவனுக்கு பலவற்றையும் படைத்து வழிபடல் என பல்வேறு கிரியைகளுடன் சிவராத்திரியை அனுஷ்டிப்பர்.

தீயசக்திகள், காமம், பேராசை, பொறாமை, வெறுப்பு ஆகியவற்றிலிருந்து மீட்சி பெற்று சந்தோஷம், சமா தானம், ஒற்றுமை, புதிய அறிவு என்பன வேண்டியே இந்துக்கள் இத்தகைய வழிபாடுகளை கடைப்பிடிக்கின்ற னர். உலகிலுள்ள சமயங்களில் இந்து சமயம் மிகவும் சிறப்பானது. எமது நாட்டைப் பொறுத்தவரை இந்துக்கள் மிக நீண்ட காலமாக ஏனைய சமயத்தவர்களுடன் ஒற்று மையாகவும் வெவ்வேறு சமயங்களுக்கு மதிப்பளிப்பவர் களாகவும் வாழ்ந்து வருகிறார்கள். எதிர்காலத்திலும் இவர்கள் இதுபோன்றே வாழ்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

பல வருடங்களாக புலிகளின் பிடியில் சிக்கித் தவித்து தற்போது அதிலிருந்து விடுதலை கிடைத்துள்ள மக்களுக்கு இவ்வருடம் சிவராத்திரி வெகு சிறப்பான தினமாக அமையும். இன்றைய நாளில் அவர்கள் மேற்கொள்ளும் பிரார்த்தனை நிறைவேறவேண்டும்.

இன்றைய நாளில் இந்துக்கள் ஏற்றும் ஒவ்வொரு தீபமும் தீயசக்திகளை விலக்கி அவர்களுன் ஆன்மீக உணர்வை அதிகரித்து சிறப்பான எதிர்காலமும் புரிந்து ணர்வும் உருவிக்க வேண்டும்.

இவ்வாறு ஜனாதிபதி தனது செய்தியில் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply