புதுக்குடியிருப்பை புலிகளின் பிடியிலிருந்து முழுமையாக விடுவிக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கையில் இராணுவத்தினர்:பிரிகேடியர் உதய நாணயக்கார

புதுக்குடியிருப்பை புலிகளின் பிடியிலிருந்து முழுமை யாக விடுவிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் 73 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் புலிகளை முடக்கியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தின் இரண்டு படைப்பிரிவுகளும், ஒரு செயலணியும் புதுக்குடியிருப்பை சுற்றிவளைத்து முன்னேறிவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் தாக்குதல் நடத்தும் நோக்கில் வந்த புலிகளின் இரு இலகுரக விமானங்கள் சுட்டு வீழ்த்தப் பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை கொழும்பில் நடைபெற்றது. இந்த செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடியர் மேலும் தகவல் தருகையில்:- புதுக்குடியிருப்பு நகருக்கு தென் பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கமல் குணவர்தன தலைமையிலான 53 வது படைப் பிரிவினர் தமது நிலைகளிலிருந்து முன்னேறிச் செல்கின்றனர்.

ஏ௩2 வீதி ஊடாக முன்னேறிய இராணுவத்தின் நான்காவது செயலணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் நிஷாந்த வன்னியாரச்சி தலைமையிலான நான்காவது செயலணியினர் அங்குள்ள தமது நிலைகளை கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் பலப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

இதேவேளை, இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலை மையிலான 58வது படைப்பிரிவினர் இருபிரிவுகளாக படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏ- 35 வீதிக்கு வடக்காக முன்னேறி புதுகுடியிருப்புக்கு மேற்குப் பிரதேசத்தை முழுமையாக கைப்பற்றிய பின்னர் அங்கிருந்து புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தை நோக்கி முன்னேறிச் செல்கின்றனர்.

அதேசமயம் புதுக்குடியிருப்பின் அம்பலவானபொக் கனை பிரதேசத்தைக் கைப்பற்றிய பிரிவினர் தற்பொழுது அங்கிருந்து கிழக்கு பிரதேசத்தை நோக்கி முன்னேறிச் செல்வதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவில் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலய பிரதேசத்தை நோக்கி அதிகமான பொது மக்கள் வருகை தந்துள்ளமை ஆளில்லா விமானங்கள் எடுத்த புகைப் படங்கள் மூலம் தெரியவந்துள்ளன என்றும் குறிப்பிட்டார். இதேவேளை கடந்த ஜனவரி முதல் நேற்றுவரை புலிகளின் பிடியிலிருந்து தப்பி, இராணுவத்திடம் பாதுகாப்புத் தேடி 35,819 பொது மக்கள் வருகைதந்துள்ள தாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply