தாய்லாந்து பிரதமர் நாடு திரும்பினார்

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த தாய்லாந்து பிரதமர் யின்லக் சினவத்ரா நேற்றுக் காலை தலதா மாளிகைக்கு விஜயம்செய்து விசேட வழிபாடுகளில் கலந்து கொண்டார். நேற்று நண்பகல் தமது இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புவதற்கு முன்பதாக நேற்றுக் காலை மீண்டும் தலதா மாளிகைக்கு விஜயம் செய்திருந்தார்.

நேற்று முன்தினமிரவு ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த தாய்லாந்துப் பிரதமரை தலதா மாளிகையின் தியவடன நிலமே வரவேற்றுள்ளார். தலதா மாளிகையைத் தரிசித்த தாய்லாந்து பிரதமர் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீட மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளதுடன் அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

நேற்றுக்காலை தலதா மாளிகைக்கு மீண்டும் விஜயம் செய்த தாய்லாந்து பிரதமரை மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ஆகியோர் வரவேற்றனர். தலதா மாளிகையில் நடைபெற்ற விசேட வழிபாடுகளில் கலந்து கொண்ட அவர். அங்கிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு ஹெலிகொப்டர் மூலம் சென்ற அவர் நேற்று நண்பகல் நாடு திரும்பினார்.

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த தாய்லாந்து ஜனாதிபதி நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியதுடன்இ பாராளு மன்றத்திற்கு விஜயம் செய்து அங்கு உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply