அவுஸ்திரேலிய கடற்படை கப்பல் இலங்கையில்

அவுஸ்திரேலிய கடற்படைக்குச் சொந்தமான ‘எச்.எம்.ஏ.எஸ். டுவூம்பா’ என்ற கப்பல் இலங்கை வந்துள்ளது. நான்கு நாள் நல்லெண்ண விஜயமாக இலங்கை வந்துள்ள இக்கப்பல் நாளை 4ம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும். அவுஸ்திரேலிய கப்பல் கட்டளை அதிகாரி, கொமாண்டர் பிரென்டொன் ஸில்கோ தலைமையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

118 மீற்றர் நீளமும் 3600 டொன் எடையும் கொண்ட ‘டூவூம்பா’ என்ற இந்தக் கப்பலில் அவுஸ்திரேலிய கடற்படைக்குச் சொந்தமான 192 கடற்படை வீரர்கள் வருகை தந்துள்ளனர்.

கப்பலில் கட்டளை அதிகாரிக்கும் இலங்கை கடற்படையினர் மேற்கு பிராந்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்கவுக்கு இடையில் விசேட சந்திப்பு இடம்பெற் றுள்ளது.

கொழும்பிலுள்ள இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ஆல யத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் மிச்செல் கொள்ளியும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். இதன் போது இருதரப்பு முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் ஞாபகச் சின்னங்களும் பரிமாறப்பட் டதாகவும் கடற்படை பேச்சாளர் கொமா ண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply