சட்ட விரோத ஆட்கடத்தல் பாரிய பிரச்சினை – ஹக்கீம்
சட்ட விரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் பாரிய பிரச்சினையாக அமைந்துள்ளது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு அவுஸ்திரேலியாவும், இலங்கையும் இணைந்து செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பது தொடர்பிலான சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் முடி, கடற்படைத் தளபதி கொலம்பகே உள்ளிட்ட பலரும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இரண்டு நாடுகளும் முனைப்பு காட்டி வருவதாக உயர்ஸ்தானிகர் ரொபின் முடி தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply