சீன தொழிற்சாலை தீ விபத்தில் குறைந்தது 50 பேர் பலி
சீனாவின் வடகிழக்கே கோழி இறைச்சி தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி குறைந்தது ஐம்பது பேர் உயிரிழந்துள்ளனர். தீப்பிடித்த தொழிற்சாலையில் இருந்து வெளியில் வர வழியில்லாமல் போனதே இவர்கள் உயிரிழக்கக் காரணம் என்று தெரிகிறது. இச்சம்பவத்தில் வேறு டஜன்கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளனர். மிஷாஸி என்ற தொழிற்சாலை நகரத்தில் உள்ள இத்தொழிற்சாலையில் தீ ஏற்படுவதற்கு அம்மோனியா வாயுக் கசிவு காரணமா அல்லது மின் கசிவு காரணமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
சிக்குண்டவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.
சம்பவ இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் வாழும் மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சீனாவில் பணியிடத்தில் தொழிலாளர் பாதுகாப்பு அம்சங்கள் பல சந்தர்ப்பங்களில் மிகவும் மோசமாக இருப்பதுண்டு.
அங்கே பெரிய தொழிற்சாலைகளிலும், சுரங்கங்களிலும் தொழிலாளர்கள் உயிரிழக்கும் விபத்துகள் நடப்பது வழமை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply