இலங்கையிலுள்ள பௌத்தர்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை!
இலங்கையிலுள்ள பௌத்தர்கள் ஒருபோதும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. மகாசங்கமும் பௌத்தர்களும் ஒருபோதும் தீவிரவாதிகளாக இருக்கவில்லை’ என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். நாகொல்லகமவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, அரன்தலாவவில் 26 வருடங்களுக்கு முன் பௌத்த பிக்குகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்த ஜனாதிபதி,
‘இவ்வாறான நிகழ்வுகள் பயங்கரவாதத்தின் மிருகத்தனத்தை நினைவூட்டுவதற்காக நடத்தப்பட வேண்டும். ஆனால், இது பழிதீர்க்கவும் ஆத்திரமூட்டவும் என ஆகிவிடக்கூடாது’ என்றார்.
‘மகாசங்கமும் பௌத்தர்களும் உண்மையை தேடுபவர்கள். மகாசங்கத்தினர் தாய்நாட்டையும் பௌத்த கோட்பாடுகளையும் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றனர்’ எனவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply